சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை திறந்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்ததால் அவருக்கு பரிசாக பணம் கிடைத்தது. தொடர்ந்து அதில் வரும் லிங்கை ஓபன் செய்து சிலம்பரசன் பதில் அளித்து வந்துள்ளார். ஒருநாள் அடுத்த சுற்றுக்கான லிங்கை அனுப்புவதற்கு சிலம்பரசனிடம் பணம் கேட்கப்பட்டது.

இதனை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக அதிலிருந்த வங்கி கணக்கிற்கு 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனிற்கு எந்த லிங்க்கும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிலம்பரசன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் மோசடி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.