பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள தானி சுச்சா சிங் கிராமத்தில், சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) பரிதாபமாக உயிரிழந்தார். ஹர்பிந்தர் சிங் (எ) சோனு என்ற அந்த இளைஞர், சமீபத்தில்தான் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்தார். சம்பவத்தன்று தனது உறவினருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஹர்பிந்தர், திடீரென சோஃபாவிலிருந்து எழுந்தபோது, அவரது இடுப்பில் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில் வெடித்த துப்பாக்கியிலிருந்து வெளியே வந்த குண்டு அவரது வயிற்றில் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
An NRI in Punjab died after being shot while getting up from a sofa.
In Abohar, Fazilka, #Punjab, the NRI had a loaded pistol strapped to his waist. He was sitting at home with relatives. As soon as he got up from the sofa, the pistol went off, hitting him in the stomach.
1/2 pic.twitter.com/oEIzf5Fz0N— Siraj Noorani (@sirajnoorani) December 30, 2025
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், படுகாயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த பதறவைக்கும் காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த ஹர்பிந்தருக்கு மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ரவீந்தர் சர்மா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
