தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதிய ரேஷன் கார்டுகள் தற்போது அச்சடிக்கும் பணியில் (Print Stage) உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அரசின் அறிவிப்பு வெளியாகும் முன்பாகவே இந்த கார்டுகள் நடைமுறைக்கு (Active) வந்துவிட்டால் மட்டுமே, அவர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும் என்ற முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கார்டுகளுக்காகக் காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு பொங்கல் பரிசைப் பெறுவார்களா என்பது, கார்டுகள் எவ்வளவு சீக்கிரம் செயல்பாட்டிற்கு வரும் என்பதைப் பொறுத்தே அமையும். இன்னும் சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
