பள்ளிச் சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் சிறிய கவனக்குறைவு கூட எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இந்தத் துயரச் சம்பவம் அமைந்துள்ளது. யு.கே.ஜி பயின்று வந்த சிறுவன் ஒருவன், விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகத் தான் வைத்திருந்த பென்சில் தொண்டையில் குத்தி பலத்த காயமடைந்தார்.
மேலும் பென்சில் தொண்டையின் உட்பகுதியைக் கிழித்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் கையில் பென்சில், பேனா அல்லது கூர்மையான பொருட்களை வைத்திருக்கும்போது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் சிறுவர்கள் ஓடும்போதோ அல்லது விளையாடும்போதோ இத்தகைய பொருட்களை வாயில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இக்கட்டான சூழலில் முதலுதவி செய்வது குறித்த விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
