#திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடையில் முன்வைத்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த தேர்தலில் வெறும் 100 ரூபாய் கொலுசைக் கொடுத்து செந்தில் பாலாஜி ஏமாற்றி ஜெயித்துவிட்டார். ஆனால், இந்த முறை மக்கள் தன்னிடம் கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில் அவர் கரூரை விட்டுவிட்டு அடுத்த மாவட்டத்திற்கு ஓடிவிட்டார்” என இபிஎஸ் (EPS) கடுமையாகத் தாக்கினார்.
மேலும், மக்களின் உரிமையை 100 ரூபாய்க்கு விலை பேச நினைத்தவரின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், மக்களைச் சந்திக்கத் துணிவில்லாமல் தொகுதியை மாற்றியவரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் சாடினார். செந்தில் பாலாஜியின் ‘கரூர் ஓட்டம்’ குறித்த இபிஎஸ்-ஸின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
