தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (25) என்பவர் கும்பகோணம் பகுதியில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 10வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் சதீஷ்குமாரும், அந்த பெண்ணும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து 10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை பிரிந்ததால் சதீஷ்குமார் மன உளைச்சலுக்கு ஆளானார். தனது மகன் சோகத்திலிருப்பதை கண்ட சதீஷ்குமாரின் பெற்றோர் தஞ்சை கீழவாசல் பகுதிக்கு வீட்டை காலி செய்துவிட்டு சென்றனர். ஆனாலும் சதீஷ்குமார் மன அழுத்ததில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனை பார்த்த அவரது பெற்ற அதிர்ச்சியடைந்த நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சதீஷ்குமாரின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
