ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அதிவேகமாகத் தீவிரப்படுத்தியுள்ளது. தெஹ்ரானின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தையும், பாதுகாப்பு கட்டமைப்பையும் முழுமையாக நிர்மூலமாக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்:

“எங்களிடம் உலகின் வலிமையான ராணுவம் உள்ளது. போர் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் எங்களது படைகள் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளன. ஈரான் மிக வேகமாகப் பலவீனமடைந்து வருகிறது. 10 புள்ளிகள் கொண்ட மதிப்பீட்டில், அமெரிக்க ராணுவத்தின் செயல்பாட்டிற்கு நான் 15 புள்ளிகளை வழங்குவேன்.” முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க வழிவகை செய்ததாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், தற்போது அந்தப் பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “ஈரான் எங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியது உண்மைதான். ஆனால், தற்போது அவர்களின் ஏவுகணைகள் தீர்ந்து வருகின்றன. அவர்கள் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.  அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் ஆகியோர் ஈரானுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  “ஈரான் வான்வெளி தற்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கள் விமானங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தேர்வு செய்து, நாள் முழுவதும் மரணத்தையும் தரைமட்டமாக்கும் தபால்களையும் வான்வழியே பொழிந்து வருகின்றன.”

அடுத்த சில மணி நேரங்களில் ஈரானின் வான்பரப்பை முழுமையாக எங்கள் ஆதிக்கத்திற்குக் கொண்டு வருவோம். இதன் மூலம் ஈரானின் முக்கிய இலக்குகள் மீது ஏவுகணை மழையைப் பொழிந்து அவற்றைச் சிதைப்போம் என்றார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரானின் பாதுகாப்புத் துறை மற்றும் அரசியல் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.