இந்தியாவில் பெரிய பள்ளிகள் இருந்தாலும், உலகிலேயே மிகவும் விலை அதிகமான பள்ளி சுவிட்சர்லாந்தில் உள்ளது. அதன் பெயர் இன்ஸ்டிட்யூட் லே ரோஸே (Institut Le Rosey). இந்தப் பள்ளியில் படிக்க ஆண்டுக் கட்டணம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆகிறது. இந்தப் பள்ளியை “அரசர்களின் பள்ளி” என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், இங்குப் பல ராஜ குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கிறார்கள்.
இந்தப் பள்ளிக்கு இரண்டு வளாகங்கள் உள்ளன. கோடையில் ஏரிக்கரையிலும், குளிர்காலத்தில் மலைகளிலும் என வருடம் முழுவதும் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் படிப்பார்கள். இங்கு 8 முதல் 18 வயதுள்ள சுமார் 450 மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு என இரண்டு மொழிகளிலும் படிக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற இந்தப் பள்ளி, அதிக கட்டணத்தால் மிகவும் பிரபலமாக உள்ளது.
