பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்!
எதிர்காலம் குறித்த துல்லியமான கணிப்புகளுக்காக உலகெங்கிலும் அறியப்பட்டவர் பாபா வாங்கா. இவர் 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட போதிலும், இரட்டைக் கோபுரத் தாக்குதல், டயானா உயிரிழப்பு போன்ற பல முக்கிய நிகழ்வுகளை இவர் முன்கூட்டியே கணித்ததால், இவரது வார்த்தைகள் இன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
வரும் 2026ஆம் ஆண்டிற்காக இவர் விட்டுச் சென்ற கணிப்புகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவரது கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் ஒரு பெரும் உலகப் போர் மூளக்கூடும் என்றும், இதில் உலகின் முக்கிய வல்லரசுகள் ஈடுபடுவதோடு, போர் உலகெங்கும் உள்ள கண்டங்களுக்கும் பரவும் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம் புதிய எல்லைகளைத் தொடும் என இவர் கணித்துள்ளார். முக்கிய முடிவுகள் மற்றும் தொழில் சார்ந்த முடிவுகளைக்கூட ஏஐ எடுக்க ஆரம்பித்து, மனிதர்களின் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வியத்தகு மாற்றங்களுக்கு மத்தியில், 2026 நவம்பர் மாதத்தில் பூமிக்குள் ஒரு பெரிய விண்கலம் நுழையக்கூடும் என்றும், மனிதர்கள் ஏலியன்களுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தப் போகிறார்கள் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
சர்வதேச அளவில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் சரிந்த ரஷ்யாவின் ஆதிக்கம் மீண்டும் உயரக்கூடும் என்றும், ரஷ்யாவிலிருந்து “உலகின் அதிபதி” என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவாகி ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் தொடங்குவார் என்றும் அவர் கணித்துள்ளார்.
இதற்கிடையில், பூமியில் ஒரு மாபெரும் இயற்கைப் பேரழிவு தாக்கும் என்றும், இதனால் பூமியின் 7-8% நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை நிகழ்வுகள் நிலைமையை மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
உலகப் பொருளாதாரம் ஒரு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்றும், பல நாடுகளின் கரன்சிகள் மதிப்பு சரியும், வங்கிகள் திவால் ஆகும் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். தங்கம் விலையில் எதிர்பாராத மாற்றம் இருக்கும் என்றும், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பாபா வாங்காவின் கணிப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
