பாகிஸ்தானில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் (TTP) என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவரும் நிலையில், கடந்த மாதம் தொடங்கிய இருதரப்பு மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஆப்கானிஸ்தானின் பாக்டிகா, குனார் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் அங்குள்ள ஒரு வீடு இடிந்து தரைமட்டமானதில், 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
