டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் அதிபரான இலான் மஸ்க், பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் தெரு ஒன்றில் பெரும் மக்கள் கூட்டம் கூடியிருக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்து, “மான்செஸ்டர் நகரம் இப்படி மாறிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, மக்கள் மத்தியில் எதற்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது என்ற பெரும் விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
— Elon Musk (@elonmusk) June 23, 2026
“>
இதனையடுத்து இலான் மஸ்கின் இந்தப் பதிவுக்குப் பிறகு இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தில் இருந்த மக்கள் இஸ்லாமியர்களின் புனித மாதமான முஹர்ரம் மற்றும் ஆஷுரா தினத்தை ஒட்டி அங்கு ஒன்று கூடியிருந்தனர் என்பதைப் பல பயனர்கள் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தனர்.
அதே நேரத்தில், மஸ்க் இந்த வீடியோவைப் பகிர்ந்த விதம் குறித்து விமர்சித்த ஒரு பயனர், “நீங்கள் ஒரு இனவெறியர் என்று நேரடியாகவே சொல்லிவிடுங்கள், அதை மறைக்கத் தேவையில்லை” என்று கடுமையாகக் சாடியுள்ளார். மான்செஸ்டர் நகரின் கலாச்சார மாற்றம் மற்றும் மத வழிபாடுகள் குறித்து இணையத்தில் தற்போதும் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
