உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிய சில நொடிகளில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் வாயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த வீடியோவில், அவர் மகளின் பையை ஏந்தியபடி வந்து, அவளை உள்ளே அனுப்பிய பிறகு திடீரென அங்கேயே அமர்ந்து சுருண்டு விழுவது தெரிகிறது.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் இதுபோன்று திடீர் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பணியில் இருந்த ஏஎஸ்ஐ ராஜேஷ் குமார் என்பவரும், ஜூலை மாதம் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த ஒருவரும் இதேபோல் திடீரென மாரடைப்பால் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
बुलंदशहर में बेटी को स्कूल छोड़ने आए युवक की हार्ट अटैक मौत, सीने में उठा दर्द, बैठे-बैठे तोड़ा दम… pic.twitter.com/78rSqWOrom
— Article19 India (@Article19_India) December 22, 2025
“>
ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்கள் கூட எதிர்பாராத விதமாகப் பொது இடங்களில் மாரடைப்பால் மரணமடைவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
