மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள கொலானி நாகா என்ற இடத்தில், ஹிட்டாச்சி ஏடிஎம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் கேட்ட தொகையை விட அதிகப் பணம் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் தன் கணக்கிலிருந்து ₹100 எடுக்க முயன்றபோது அவருக்கு ₹500 கிடைத்துள்ளது, ஆனால் அவரது கணக்கிலிருந்து ₹100 மட்டுமே கழிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொருவருக்கு ₹400-க்கு பதிலாக ₹2000 பணம் வந்துள்ளது.
இந்த விஷயம் காட்டுத்தீ போலப் பரவி, சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால், அந்த ஏடிஎம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
View this post on Instagram
“>
நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு வந்த போலீஸார் ஏடிஎம் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தினர். தற்போது வங்கியின் தொழில்நுட்பக் குழுவினர் இந்த ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
