ஹோட்டல் அறை ஒன்றில் பெட்டிற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சில ‘மினுமினுக்கும் வெளிப்படையான பந்துகள்’ பற்றிய பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் பலவிதமான விவாதங்களையும் கற்பனைகளையும் கிளப்பியுள்ளது.
ஹோட்டல் ஊழியர்கள் அறையைச் சுத்தம் செய்யும்போது படுக்கைக்கு அடியில் இந்த உருண்டைகள் கிடைத்துள்ளன. இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர் ஒருவர், “இது ஜென்-இசட் தலைமுறையினரின் ஏதோ ஒரு புதிய பரிசோதனை” என்று கூற, நெட்டிசன்கள் பலரும் இது என்னவாக இருக்கும் என்று தங்களுக்குத் தோன்றியபடி ஆபாசமாகவும் விசித்திரமாகவும் கணித்துக் கமெண்ட் செய்யத் தொடங்கினர்.
இதனால் இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவத் தொடங்கியது. ஆனால், நெட்டிசன்களின் விசித்திரமான கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்தப் பந்துகள் உண்மையில் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவை வேறு எதுவும் அல்ல, வாய்த் துர்நாற்றத்தைப் போக்கப் பயன்படும் நவீன ரக ‘மவுத் ஃப்ரெஷ்னர்’ உருண்டைகள் ஆகும். வாயில் போட்டுச் சுவைக்கும்போது துர்நாற்றத்தை நீக்கும் இந்தத் வெளிப்படையான பந்துகள், இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
What is that? 😂
कल Hotel Room की Cleaning के दौरान Bed के नीचे ये अजीब Transparent Balls मिलीं।
पहले लगा कोई Decoration Material होगा लेकिन Staff का Reaction देखकर मामला Suspicious लगने लगा 😭एक भाई बोला “Gen Z का नया Experiment है
दूसरा बोला “भाई Google मत करना पछताओगे 😁… pic.twitter.com/xVrfJ9XPx6— Wasim Ahmed (@TheWittyWasim) May 13, 2026
“>
அதே நேரத்தில், ஹோட்டல் அறைகளில் நறுமணத்தைப் பரப்புவதற்காகக் கண்ணாடிப் பாத்திரங்களில் வைக்கப்படும் ‘ரூம் ஃப்ரெஷ்னர்’ கிரிஸ்டல் பந்துகளாகவும் இவை இருக்கலாம் என்றும், பெட்டிற்கு அடியில் தவறி விழுந்ததால்Staff-கள் குழம்பியிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, இது வெறும் மவுத் ஃப்ரெஷ்னர் தான் என்று அந்தப் பதிவைப் பகிர்ந்தவரே தெளிவுபடுத்தியுள்ளார்.
