தமிழக அரசியலில் ‘விசில் புரட்சி’ கிளம்பியுள்ள நிலையில், திமுக-வின் இரும்புக்கோட்டையாகக் கருதப்படும் மூத்த நிர்வாகிகளே இப்போது தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். கலைஞர் கருணாநிதி காலத்திலிருந்தே சுமார் 40 ஆண்டுகளாக திமுக-வில் விசுவாசமாகப் பணியாற்றிய ஒரு மூத்த பெண் நிர்வாகி, இப்போது அக்கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார். மாநிலத் தொண்டரணி இணைச் செயலாளர், மின்வாரிய ஆலோசனைக் குழு தலைவர் எனப் பல முக்கிய பதவிகளை வகித்த இவர், திமுக-வுக்கு டாட்டா காட்டிவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்துள்ளார்.

​”தம்பி விஜய்யின் விசில் புரட்சியும், மண்ணின் மைந்தர் அண்ணன் கே.ஏ.எஸ் அவர்களின் தலைமையும்தான் என்னை இங்கே இழுத்து வந்தது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் கே.ஏ.எஸ் அவர்களின் நிழலில் ஒரு போராளியாகத் தவெக-வில் பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். 40 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஒரு மூத்த நிர்வாகி இப்படித் தாவியது, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.