ஐபிஎல் 2026 தொடரில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய ஆகாஷ், பவர்பிளேயிலேயே சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுத்ததை விட அவர் கொண்டாடிய விதம் தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
#AkashSingh brings the heat & #CSK's openers are back in the dugout! 🔥
PS: Another note makes an appearance in the celebrations! 📝#TATAIPL Race To Playoffs 2026 ➡️ #LSGvCSK | LIVE NOW 👉 https://t.co/5Mr0NV7vdi pic.twitter.com/z63rfZaJUh
— Star Sports (@StarSportsIndia) May 15, 2026
ஒவ்வொரு முறை விக்கெட் எடுக்கும்போதும் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்து கேமரா முன்னால் காட்டினார் ஆகாஷ் சிங். அதில், “#Akki on fire – டி20 போட்டிகளில் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று ஆகாஷிற்குத் தெரியும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஆகாஷ் சிங், அதே அணிக்கு எதிராக இப்படி ஒரு மாஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரின் இந்த ‘நோட்’ கொண்டாட்டம் தற்போது வைரலாகி வருகிறது.
