நேற்று வெளியான சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் தொடக்கத்தில், தியேட்டரே அதிரும் வகையில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. படம் தொடங்குவதற்கு முன்பே திரையில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிரம்மாண்ட புகைப்படம் தோன்றி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. “Best Wishes to Chief Minister Vijay from Anbaana Fans” என்ற வாசகத்துடன், விஜய்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் திரையில் ஒளிபரப்பித் தெரிவித்துள்ளனர்.

​அதுமட்டுமில்லாமல், சூர்யாவும் விஜயும் இணைந்து வரும் மாஸ் காட்சிகளும் திரையில் காட்டப்பட, ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தித் தீர்த்தனர். தியேட்டர் நிர்வாகமும் ரசிகர்களும் இணைந்து செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா படம் பார்க்க வந்த இடத்தில், தங்கள் ஆசை நாயகன் விஜயையும் திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் அந்தத் தருணத்தைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.