எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
”ஒரு பெண் தலைவராகப் பெண்களைத் தரைக்குறைவாகப் பேசுவதை நானும் தேமுதிகவும் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதுதான் கேப்டனின் உறுதியான நிலைப்பாடும் கூட. ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் எந்தப் பெண்ணின் பெயரையாவது நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசினாரா?” என்று அவர் வினவியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “இரட்டை அர்த்தத்தில் பேசியதற்காகவே ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால், இன்று எத்தனையோ அரசியல் தலைவர்கள் பொதுமேடைகளிலும் பொதுவெளியிலும் எவ்வளவோ மோசமான கருத்துக்களைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாரையும் இந்த விஜய் அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறதா?” எனக் சுளீரெனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மட்டுமே இத்தகைய அவசரக் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் சாடியுள்ள பிரேமலதா விஜயகாந்தின் இந்த அதிரடிக் கருத்துக்கள், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.
