ஓடும் ரயிலின் பெட்டிக்குள்ளே இரு நபர்களிடையே ஏற்பட்ட பயங்கரக் கைக்கலப்பின் போது, எதிர்பாராத விதமாக இருவரும் ஓடும் ரயிலுக்குக் கீழே விழுந்த நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயிலின் கதவருகே நின்று கொண்டு இரு நபர்களும் ஆத்திரத்தில் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், நிலைதடுமாறி ஓடும் ரயிலின் பிளாட்பார இடைவெளியிலும் தண்டவாளப் பகுதியிலும் விழுந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதோடு இணையவாசிகளிடையே பெரும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டியின் நுழைவுவாயில் அருகே மிக ஆபத்தான சூழலில் இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சக பயணிகள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் இருவரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் ரயில் வேகமெடுக்கத் தொடங்கிய சூழலில், தங்களின் பாதுகாப்பைப் பற்றிய எந்தவொரு சுயநினைவும் இன்றி சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும் தற்கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரயிலுக்கு அடியில் சுருண்டு விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்த சக பயணிகள் பயத்தில் அலறியடிப்பதும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த ஆபத்தான வீடியோவைக் கண்டு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோபமும் ஆத்திரமும் ஒரு நொடியில் மனிதனின் பகுத்தறிவை எப்படி மழுங்கடித்து, மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளுகிறது என்பதற்கு இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது. ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களின் பாதுகாப்பில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற உயிரைப் பணயம் வைக்கும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
🚆 Shocking | Two passengers fell from a moving train during a fight. pic.twitter.com/EGDAhQLO7u
— FalconUpdatesHQ (@FalconUpdatesHQ) August 3, 2026
“>
