எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது மிகக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் இன்று முதல்வர் விஜய் அவர்கள் துணிச்சலாகச் செய்திருக்கிறார்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அமைச்சர், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாகச் சாடினார்.
”தான் ஆட்சியில் இருக்கும்போதே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உதயநிதி ஸ்டாலின் கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதலமைச்சராக இருந்த இபிஎஸ் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்” என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “பெண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரீகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள் மீது இந்தத் தவெக அரசு எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றிச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
