நேற்று லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மிட்செல் மார்ஷ் தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, அன்ஷுல் கம்போஜ் வீசிய போட்டியின் 5-வது ஓவரில் மார்ஷ் செய்த சம்பவம் மைதானத்தையே அதிர வைத்தது. முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்தில் ஒரு பவுண்டரியையும் விளாசினார். அந்த ஒரே ஓவரில் மட்டும் லக்னோ அணிக்கு 28 ரன்கள் கிடைத்தன.
𝗕𝗢𝗢𝗠 ✖️ 4️⃣ 😮
🎥 Sit back and enjoy Mitchell Marsh's four 6️⃣'s in the same over 🔥
And what a time for him to bring up 1️⃣0️⃣0️⃣ #TATAIPL sixes 👌
Updates ▶️ https://t.co/v1R8RJXPe8#KhelBindaas | #LSGvCSK | @LucknowIPL pic.twitter.com/xehqXwTNxE
— IndianPremierLeague (@IPL) May 15, 2026
மிட்செல் மார்ஷின் இந்த அதிரடியால் லக்னோ அணி பவர்பிளே முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி 86 ரன்களைக் குவித்தது. வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்து மார்ஷ் சாதனை படைக்க, சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயினர். மார்ஷின் இந்த அதிரடி ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
