தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அன்று ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் பதவியேற்க மேடைக்கு வந்தார். அப்போது, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற அதிகாரத் திமிரைக் காட்டாமல், அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக விஜய் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்.

​செங்கோட்டையன் தனது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்து முடிக்கும் வரை, முதலமைச்சர் விஜய் அவர்கள் நின்றவாறே அவருக்கு கௌரவம் அளித்துள்ளார். இந்தச் செயலை நேரில் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன், “இப்படி ஒரு காட்சியை எங்குமே பார்த்ததில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பதவியும் அதிகாரமும் வந்தாலும், பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை விஜய் தவறவில்லை என்று சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலாகி வருகிறது.