தமிழக அரசியல் களத்தில் “சொன்னதைச் செய்வது” என்பது அரிதான ஒன்றாக மாறிப்போன நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் டி.கே. பிரபு தனது நேர்மையால் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது கைக்குடி பகுதி மக்கள், சாலை வசதி இன்றி தாங்கள் படும் அவஸ்தையை அவரிடம் கண்ணீருடன் முறையிட்டனர். அப்போது, “வெற்றி பெற்றதும் உங்கள் குறையை முதல் ஆளாகத் தீர்த்து வைப்பேன்” என்று அவர் உறுதியளித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்னாடி அந்த ஊர் மக்கள் கிட்ட என்ன சொன்னாரோ ஜெயிச்சதுக்கு அப்புறம் அமைச்சரா போய் நின்னு அதையும் செஞ்சுட்டாரு
தவெகல சொல் அல்ல செயல் @drtkprabhu_TVK 🔥🔥🔥@Saattaidurai இறங்கி அழு கபிலா இனி உன் காலம் இல்ல😂 pic.twitter.com/KSpzkWCdWb
— priya (@PriyankaSmile01) May 15, 2026
அவர் கொடுத்த வாக்கின்படியே, நேற்று அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் டி.கே. பிரபு, புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை அதிரடியாகத் தொடங்கி வைத்தார். சொன்னதைச் செய்த அமைச்சரைக் கண்டு அந்த ஊர் மக்கள் ஆனந்தக் கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். “தவெக-வில் சொல் அல்ல செயல்” என்ற வாசகத்துடன் இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி, மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
