மனிதர்களைப் போலவே காதலிப்பதிலும், ஊடல் கொண்டு சண்டை போடுவதிலும் விலங்குகளும் சளைத்தவை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், எக்ஸ் (X) சோசியல் மீடியா தளத்தில் வைரலாகி வரும் கொரில்லா தம்பதியின் க்யூட்டான காதல் சண்டை வீடியோ தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர சிரிப்பலையை ஏற்படுத்தி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் இம்தியாஸ் மஹ்மூத் (@imtiazmadmood) என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த 20 விநாடிகள் கொண்ட கொரில்லா தம்பதியின் குறும்பான வீடியோவை இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமான உலக மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோவில், பெண் கொரில்லா ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கடும் கோபத்தில் இருக்க, அதனைச் சமாதானம் செய்வதற்காக ஆண் கொரில்லா அசுரப் பிரயத்தனம் செய்து பாசத்தோடு பக்கத்தில் சென்று தொட்டுத் தொட்டுப் பேச முயல்கிறது. ஆனால், கோபத்தின் உச்சியில் இருக்கும் அந்த பெண் கொரில்லாவோ, ஆண் கொரில்லா தொடும்போதெல்லாம் மனுஷப் பொம்பளைங்க போலவே “என்னைத் தொடாதே” என்று கையைத் தட்டிவிட்டுத் தடுத்துத் தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டி முகத்தைத் திருப்பிக் கொள்கிறது.

ஆண் கொரில்லா விடாமல் பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றும், பெண் கொரில்லாவின் கோபம் குறைந்தபாடில்லை. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான செல்லச் சண்டையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் இந்த கொரில்லாக்களின் கலகலப்பான வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டா சமாதானம் செஞ்சுதான் ஆகணும் போல” என்று கமெண்ட் பாக்ஸில் வாரி வாரி இறைத்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால், இந்த க்யூட் கொரில்லா வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.