அரசு மருத்துவமனைக்கு ஏழை எளிய மக்கள் வருவதே தங்களுக்கு இலவசமாகச் சிகிச்சை கிடைக்கும், அரசாங்கம் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், இந்த அரசு மருத்துவமனையில் ட்ராலி மற்றும் வீல்சேர் தள்ளும் ஊழியர்கள், நடக்க முடியாத ஏழை நோயாளிகளிடம் கட்டாயப் பணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் தவெக MLA ரமேஷிடம் கதறி அழுது புகார் அளித்தனர். காசு கொடுத்தால் தான் நோயாளிகளை வார்டுக்குள் கூட்டிச் செல்வோம் என்று ஊழியர்கள் கறாராகப் பேசி ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளனர்.

​இந்த விவகாரம் இதுவரை உயரதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு இருந்த நிலையில், தவெக MLA ரமேஷ் மருத்துவமனையில் நடத்திய அதிரடி ஆய்வின் மூலம் இந்தத் கொடூரம் மொத்தமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழை நோயாளிகளை வதைக்கும் இந்த ஈனச் செயலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு MLA அதிரடி உத்தரவிட்டுள்ளார்.