ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் ரகசியமாக கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தைக் கண்டுபிடித்த பெண் டாக்டர்கள் உடனடியாக ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், இரவு நேரங்களில் அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர் ரயான் சோ (வயது 28) கழிவறைக்குள் பலமுறை செல்வது பதிவாகியிருந்தது.
சிங்கப்பூர் வம்சாவளியையுடைய ரயான் சோவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் சபல ஆசையால் பாதிக்கப்பட்ட நிலையில், பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோக்கள் எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
2021ம் ஆண்டு பயிற்சி டாக்டராக சேர்ந்த நாளிலிருந்தே அவர் இந்த செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும், அவரது மடிக்கணினி மற்றும் செல்போனில் 4,500 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது சிங்கப்பூர் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில், ரூ.28 லட்சம் பிணையில் அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
