இந்தியாவை சேர்ந்த வைத்தியலிங்கம் முத்துக்குமார் (49) என்பவர், 2007ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை மணந்தார். 2011ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

அங்கு தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த சல்மா அப்துல் ரசாக் என்ற பெண்ணை சந்தித்து உறவில் ஈடுபட்டார். குழந்தை விருப்பம் மற்றும் விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சல்மாவை நம்பவைத்த முத்துக்குமாரை, அவர் திருமணமானவர் எனத் தெரிந்திருந்தும் திருமணம் செய்ய சல்மா ஒப்புக்கொண்டார்.

அதன்படி, 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் நாகூரில் முஸ்லிம் வழக்கத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சிங்கப்பூருக்கு திரும்பிய முத்துக்குமார், தனது முதல் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார். இரண்டாவது மனைவியான சல்மாவை ரகசியமாக சந்தித்து வந்த முத்துக்குமாருடன், பின்னர் சல்மாவுக்கு கர்ப்பம் ஆகியிருந்தார்.

பிரசவத்திற்காக சிங்கப்பூரின் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மாக  ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த முதல் மனைவி, பிரசவ அறையிலிருந்து வெளியே வந்த முத்துக்குமாரை பார்த்ததன் மூலம், இரண்டாவது திருமண விஷயம் அம்பலமானது.

இதையடுத்து, வைத்தியலிங்கம் சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, தனது முதல் மனைவியை ஆதரவாளராக பதிவு செய்து, வேறு யாரையும் திருமணம் செய்யவில்லை என்று பொய்யான தகவல் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தனது முதல் மனைவியைவிட்டு விவாகரத்து செய்யாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்ததாகவும், தற்போது இரண்டாவது மனைவி சல்மா, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையிலான குடும்ப வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.