இங்கிலாந்தின் மறைந்த இராணி 2-ம் எலிசபெத் தனது சிறுவயதிலிருந்தே ‘கோர்கி’ இன நாய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

சிறிய கால்களுடன் குள்ளமாக காட்சியளிக்கும் இந்நாய் இனத்தை ராணி எலிசபெத் வாழ்நாளில் சுமார் 30 வரை வளர்த்துள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் ‘கோர்கி’ நாய்களை பெருமைபடுத்தும் வகையில், நாய்களுக்கான பிரத்தியேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் பேஷன் ஷோவுகள் இடம்பெற்றன.

உரிமையாளர்கள் தங்கள் நாய்களுக்கு விசேஷ அலங்காரங்களை செய்து அழைத்து வந்த நிலையில், ஸ்டைலாக வலம் வந்த கோர்கி நாய்கள் அனைவரையும் கவர்ந்தன. இந்த விழா காண்போர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.