தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண்வாசனைக்குக் கொண்டு வந்து ‘என் இனிய தமிழ் மக்களே…’ என்ற தனது கம்பீரக் குரலால் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இன்று (ஜூன் 10) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். திரையுலகையும் தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள அவரது மறைவிற்குச் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்திற்கு முன்பாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், பாரதிராஜாவிடம் ஒருமுறை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை அழைத்துச் சென்று கிராமிய பின்னணி கொண்ட படம் இயக்குமாறு கேட்டபோது, “இந்த பையன் வேண்டாம், நீயே படம் இயக்கு” என தான் நிராகரித்ததாகப் பாரதிராஜாவே பேசிய பழைய வீடியோ ஒன்றை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
அன்று தான் தவிர்த்த ஒரு விதை இன்று உலகமே கொண்டாடும் நம்பர் 1 ஹீரோவாக வளர்ந்து நிற்பதாகப் பாரதிராஜாவே வியந்து பாராட்டியுள்ளார். மேலும் கடந்த 2020-ல் விஜய்யின் 46-வது பிறந்தநாளின் போது, “என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை விஜய்” என்றும், அவரது நடனம், நடிப்பு, துணிச்சல் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்க்கும் காந்த சக்தி என அனைத்தையும் பாராட்டி பாரதிராஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
