பாகிஸ்தானின் சர்கோதா மாகாணத்தில் உள்ள சத்தார் பகுதியைச் சேர்ந்த மசார் என்ற நபர், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி இக்ரா பீவியை (22) கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வழக்கமாக வாக்குவாதம் நடப்பதாகக் கூறப்படும் இந்த தம்பதிக்கு, சமீபத்தில் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆத்திரமடைந்த மசார், தனது மனைவியின் கை, கால்களை கட்டி வைத்து , கறி வெட்டும் கத்தியால் அவளது ஒரு காலை வெட்டியுள்ளார்.
வலியால் கத்தி அலறி துடித்த இக்ரா பீவியை அக்கம் பக்கத்தினர் விரைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான மசாரை சர்கோதா சாக் பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர். இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
