அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போன் வந்தவுடன் நீங்களாக முன்வந்து ‘ஹலோ’ என்று சொல்ல வேண்டாம்; ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் குரலை ரகசியமாகப் பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உங்கள் குரலைப் போலவே அச்சு அசலாக மாற்றிக்கொள்கின்றனர்.

பிறகு, உங்கள் குரலைப் பயன்படுத்தியே உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி அவர்களிடம் பணம் பறிக்க வாய்ப்புள்ளது.

“>

 

எனவே, எதிர்முனையில் இருப்பவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அதன் பிறகு நீங்கள் பேசுவதே பாதுகாப்பானது.