இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹமாஸை தோற்கடிக்க எத்தனை மாதங்கள் ஆனாலும் போராடுவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.