ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.