கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதீ கன மழை பொழிந்துள்ளது.

ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் 14.12 .2023 அன்றே  தென் மாவட்டங்களில்….  நான் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் அதீ கன மழை பெய்யும் என்று செய்தி வெளியிட்டார்கள்.  அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஊடகத்திலும்,  பத்திரிகைகளும் இந்த செய்திகள் வெளிவந்துள்ளன. உடனடியாக  இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதீ கன மழையால் இந்த நான்கு மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதற்கு முழு காரணம் அரசு உரிய முறையில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க தவறியது தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்களுடைய பாதிப்பை குறைத்திருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை  வருவதற்கு முன்பாகவே…. மக்களுக்கு எந்தெந்த பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் புயல் – வெள்ளம் – கனமழை செய்தி வெளியிடுகின்றதோ,  அதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு… அரசு உரிய முறையிலே  செயல்பட்டிருந்தால் இன்றைக்கு சென்னையில் மிக்ஜாம்  புயல் பாதிப்பில் இருந்தும் மக்களை மீட்டிருக்கலாம். இப்பொழுது தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் இருந்தும் மக்களை பாதுகாத்திருக்கலாம் என தெரிவித்தார்.