​திமுக ஒரு குடும்பமாகச் செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சியின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதில் எவ்விதத் தவறுமில்லை என்றும் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஏற்கெனவே மற்றவர்கள் அரசியலுக்கு வரவில்லையா? உதயநிதி மட்டும் ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது?” என கேள்வி எழுப்பினார். மேலும், கருணாநிதி குடும்பத்தினர் தமிழக மக்களுக்காகப் பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளதோடு, அந்த குடும்பத்தின் பின்னணியில் பெரும் உழைப்பும் தியாகமும் அடங்கியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.