​தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைவது குறித்த தகவல்கள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிமுக-வில் மீண்டும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த அரசியல் நெருக்கடியால் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனையில் இருந்த ஓபிஎஸ்-ஐ, அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்த மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தவெக-வில் இணைந்தால் அவருக்குத் ‘தெற்கு மண்டல பொறுப்பாளர்’ பதவி வழங்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ள நிலையில், இது குறித்து வரும் தை மாதம் 1-ஆம் தேதி (பொங்கல் அன்று) தனது இறுதி முடிவை அறிவிப்பதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.