யூனியன் வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி நிறுவனத்தில் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் குறித்து 30 நாட்கள் இலவசமாக ஆண்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 19 முதல் 45 வயதிற்கு உட்பட்ட திருப்பத்தூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கட்டாயமாக அவர்கள் வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது இலவச உணவு வழங்கப்படும், பயிற்சிக்குப் பிறகு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு ஆர்வம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களின் ஜெராக்ஸ் நகலுடன் நிறுவனத்திற்கு நேரில் வந்து பெயரை பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.