கள்ளு கடையை முதன்முதலில் கலைஞர் தான் திறந்து வைத்தார் என சொன்னீங்க ? ஆனால் சமீபத்தில் அண்ணாமலை சொன்னார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கள்ளுக்கடையை நாங்கள் திறப்போம் என் சொல்லி இருக்காரு என்ற கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா, 

இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் இருக்கு. கள்ளு  உணவு என்று பல ரிசர்ச் சொல்லுது. அது விவசாயிகளினுடைய…  அதுவும் தென்னை விவசாயிகளுக்கு….  இன்னைக்கு நீங்க பாத்தீங்கன்னா….  கொப்பரைக்கு 107 ரூபாய் மத்திய அரசாங்கம் அறிவிச்சி இருக்கு. ஆனால்  விவசாயிகள் பிரைவேட்  டிரேடர்ஸால் வஞ்சிக்கப்படுகிறார்கள் அவங்க 107 இல்ல 57 ரூபாய் கொடுக்கிறாங்க.

என்னோட தோட்டத்திலிருந்து நான் கொப்பரை வித்தால் அது தான் பிரைவேட் கொடுக்குறாங்க. அதனால அந்த மாதிரியா  இருக்கிற சூழ்நிலையில் இருந்து, அவர்களுக்கு ஒரு வருமானத்திற்காக பேசியிருப்பது கள்ளுப்பற்றி….  முதல் முதலில் தமிழர்களுக்கு நீங்க பாத்தீங்கன்னா….  1970 ஆகஸ்ட் 31 கள்ளுக்கடை திறக்குறாங்க… சாராயக்கடை எல்லாம் திறக்குறாங்க…   அப்போது முதலில்  ராஜாஜி போய் இதுவரை குடி என்றால் என்னன்னு தமிழனுக்கு தெரியாது.

அதனால தயவு பண்ணி இந்த மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நீங்க கைவிடனும்னு கேட்டதுக்கு இவர் என்ன சொன்னாரு ? ராஜாஜி அவர் பையனுக்கு மேயர் கேட்க  வந்தாரு. அதாவது புளுகுனிகள்…  இன்னைக்கு ஸ்டாலின் புளுக்கிட்டு இருக்க மாதிரி தான் அன்னைக்கு கருணாநிதியும் புளுகுனாரு. ஆகவே இந்த புளுகுணிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தனும் இல்ல.. அதனால தமிழின காப்பாத்தணும்… அடுத்த தலைமுறையை போதைக்கு அடிப்படாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.