விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் மாலதி கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து மைனருக்கு தெரிய வரவே அவர் சரவணனை அழைத்து எச்சரித்துள்ளார். ஆனால் சரவணன் கேட்காமல் தொடர்ந்து மாலதியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் கோவில் திருவிழாவுக்காக மைனர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவர் சரவணன் மீது கோபத்தில் இருந்ததால் தன்னுடைய அண்ணன் பாண்டியராஜ் மற்றும் நண்பர் அழகர்சாமி ஆகியோருடன் சேர்ந்து சரவணனை  சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த தகவலின் பேரில் ராஜபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தளை மறைவாக இருந்த மைனர், பாண்டியராஜ் மற்றும் அழகர்சாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.