வெங்காயம் விலை ரூ.25க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கிலோ ரூ.25 என மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி விலை அதிகரித்துள்ள மாநிலங்களின் சந்தைகளுக்கு மானிய விலையில் வெங்காயத்தை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.