குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள லூனாவாடா பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் 26 வயதுடைய மனநலம் குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அந்த முதியவர் நெருங்கிய உறவினர் ஆவார்.

சம்பவத்தன்று தனது மனைவியைப் பால் வாங்க வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முதியவர், அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டி இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண் நடந்தவற்றைத் தனது தாயிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த அவர் தைரியமாக லூனாவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது சமூகத்திற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், அந்த 70 வயது முதியவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதிய வயதிலும் உறவுமுறை பாராமல் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட முதியவரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.