இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலைக் கண்டு வியப்பது வழக்கம். அந்த வகையில், ‘மியா’ என்ற வெளிநாட்டுப் பயணி தனது இந்தியப் பயணத்தின் போது தன்னை ஆச்சரியப்படுத்திய 10 சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, இந்தியர்கள் கைகளால் சாப்பிடும் முறை, அனைத்து உணவகங்களிலும் கைகளைத் தூய்மைப்படுத்த சோப்பு மற்றும் தண்ணீர் வசதி இருப்பது, இந்தியாவிலேயே பலரும் வெவ்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் இங்குள்ள மக்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது ஆகியவை அவருக்குப் புதிய அனுபவத்தைத் தந்துள்ளன.
மேலும், குழந்தைகளைக் கண் திருஷ்டியிலிருந்து காக்க மை இடுவது, திக் டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் போக்குவரத்து வசதிகள் எளிதாகக் கிடைப்பது போன்றவையும் அவரை ஈர்த்துள்ளன.
அதே சமயம், குடிநீர் மற்றும் உணவுகளில் கலப்படம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ரயில்களில் பயணிக்க முன்கூட்டியே முன்பதிவு செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இறுதியாக, இந்தியா மீதான தனது காதலையும் மியா வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
