மங்களூரு அருகே மூத்பித்ரி பகுதியில் உள்ள புச்சே மொகாரு கிராமத்தில், பாரம்பரிய ‘தர்ம நேமா’ திருவிழாவின் போது நடந்த பாலம் விபத்து பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் இருந்து புனித பண்டாரத்தை (Bhandara) பல்லக்கில் சுமந்து கொண்டு பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அங்கிருந்த சிற்றோடையைக் கடக்க 50 ஆண்டுகள் பழமையான குறுகிய நடைபாலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக, பாரம் தாங்காமல் பாலத்தின் மரக்கட்டைகள் திடீரென முறிந்து விழுந்ததில், பல்லக்கைச் சுமந்து சென்ற 8 பேர் 10 அடி ஆழமுள்ள பாறைகள் நிறைந்த ஓடைக்குள் விழுந்து படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் புனிதமான சாமி சிலையும் சேதமடைந்திருப்பது பக்தர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தின் பதறவைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>