சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வினோதமான வீடியோ தீயாய் பரவி வருகிறது. ஒரு விசேஷ நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஃபையர் பான்’ கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக நெருப்பு மூட்டப்பட்ட வெற்றிலையை கடைக்காரர் வாடிக்கையாளரின் வாயில் நேரடியாக ஊட்டிவிடுவார்.
ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர், ஒரு பெண்ணிற்கு வெற்றிலையை ஊட்டிவிடுவதற்குப் பதிலாக, எரியும் வெற்றிலையை அந்தப் பெண்ணின் முகத்திற்கு முன்னால் வைத்து வட்டமாகச் சுற்றி ஆரத்தி எடுப்பது போலச் செய்கிறார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்களும், வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அந்த நபரின் விசித்திரமான செயலால் பெரும் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
சிலர் இந்தச் செயலை வேடிக்கையாகக் கருதினாலும், இன்னும் சிலர் இது தேவையற்ற ஒரு நாடகம் என்று விமர்சித்து வருகின்றனர். “சாப்பிட வந்தவருக்குச் சாப்பாடு போடாமல் ஏன் இப்படிச் சுற்றி விளையாடுகிறார்?” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
पान खिला रहा है या मुंह की आरती उतार रहा है
😂😂 pic.twitter.com/Ev7gv0wCsL— Rebellious 2.0🕊️ (@RebelliousPari8) April 24, 2026
“>
சாதாரண ஒரு ஃபையர் பான் விஷயத்தை, தனது விசித்திரமான ஸ்டைலால் அந்த நபர் இணையத்தில் பேசுபொருளாக மாற்றியுள்ளார். இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற சிறு வித்தியாசமான விஷயங்கள் கூட எளிதில் வைரலாகிவிடுகின்றன என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.
