கர்நாடகாவில் உள்ள மதுப்பிரியர்களுக்கு மே மாதம் ஒரு கசப்பான செய்தியுடன் தொடங்கப்போகிறது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கலால்துறை வரி விதிப்பில் (Excise Duty) அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக, வரும் மே 1-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்கிறது.

​குறிப்பாக, சித்தராமையா அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். அரசின் நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மே 1 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய விலை உயர்வால், சாதாரண மதுபானங்கள் முதல் விலை உயர்ந்த பிராண்டுகள் வரை அனைத்தும் பாக்கெட் பணத்தைப் பதம் பார்க்கப்போகின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்களைக் கடத்தி வருவதைத் தடுக்கவும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.