திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  அருகே, வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் உரிமையாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்த நிலையில், அவ்வழியே கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்த பைக் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதியதில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

“>

 

விபத்தை ஏற்படுத்திய நபர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாணியம்பாடி தாலூகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.