தெலுங்கானா மாநிலம் மேய்ச்சல் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் கடையில் இரண்டு பூக்கடையும் அமைந்துள்ளது. நேற்று இந்த கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் திருப்பாத்தா என்ற மூதாட்டி, ரபிக், தினேஷ் என்ற இரண்டு வாலிபர்கள் என மொத்தம் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
LP Gas explosion Triggers Building Collapse in Medchal; One Dead, Three Injured
One person was killed and three others seriously injured after a cooking gas exploded in a house on Market Road in Medchal town on Monday night. The powerful explosion led to the collapse of an old… pic.twitter.com/1Yfcd02InA
— Sudhakar Udumula (@sudhakarudumula) August 5, 2025
