சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண், தனது ரேபிடோ ரைடு ரத்து செய்ததற்கான காரணமாக, ரைடரின் உடலமைப்பை வைத்து அவமதிக்கும் வகையில் பேசுகிறார்.
மேலும், அந்த ரைடரின் அனுமதியில்லாமல் ரகசியமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவமானப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ பரவியதும், அந்தப் பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் விளக்கமாக கூறும்போது, “பார், நான் ரகசியமாக வீடியோ எடுக்கறேன்… நா எங்க உட்காரலாம்னு சொல்லுங்க… அவ்வளவு இடமே இல்ல” என கூறி, அந்த ரைடரின் உடலை கேலி செய்துள்ளார்.
இதனை அவர் கேலியாக பேசி வீடியோ எடுத்துள்ள விதம், அந்த ரைடரின் மரியாதையை இழிவுப்படுத்தும் வகையில் இருந்தது என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. வீடியோ வெளியாகியதும், நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர் கூறியதாவது, “ஒரு சாமானியர் தனது வேலையைச் செய்ய புறப்பட்டிருக்கிறார்.
பயணம் சிரமமாக இருந்தால் ரைடு ரத்து செய்யலாம். ஆனால் அவரை வீடியோ எடுத்து, இன்டர்நெட்டில் கேலி செய்வது மிகவும் தவறான செயலாகும்” எனக் கூறினார். மற்றொரு நபர், “@rapidobikeapp நிறுவனம் இந்த வாடிக்கையாளரை பிளாக் பண்ண வேண்டும். இவர் ride cancel செய்யலாம், ஆனால் அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது” என கூறியுள்ளார்.
தற்போது, பலர் ராபிடோ நிறுவனத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். இந்தப் பெண்ணின் செயல், ஒரு வேலைக்குச் செல்லும் மனிதரின் மரியாதையை சிதைக்கும் செயல் என்றும், இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காதவாறு கண்டிப்பான நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்துகின்றனர்.
சமூகத்தில், ஒருவரின் உடலமைப்பை வைத்து கேலி செய்வது தவறு என்பதை நினைவூட்டும் விதமாக, இந்த சம்பவம் மீதான கண்டனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
