ஜூலை 26, 2025 அன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில், டெல்லிக்கு புறப்பட்டிருந்த ஸ்பைஸ்ஜெட் SG-359 விமானத்தின் போர்டிங் கேட் அருகே, மூத்த ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆர். கே. சிங் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் வெளியாகிய வீடியோவில், அதிகாரி மூன்று ஊழியர்களை கடுமையாக தாக்கும் காட்சிகள் வைரலான நிலையில், தற்பொழுது வெளியாகியுள்ள இரண்டாவது வீடியோவில், அதிகாரியே முதலில் ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இரண்டாவது வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் இல்லை.
இந்த சம்பவம் குறித்து X தளத்தில் ‘தேஷ் பந்தியூ பாண்டே’ என்ற பயனர், “அந்த அதிகாரி குடும்ப அவசரநிலைக்கு இடையே 8–9 கிலோ எடை கொண்ட காபின் பையை எடுத்துச் சென்றார். செக்-இனில் அது அனுமதிக்கப்பட்டிருந்தாலும், போர்டிங் கேட் பகுதியில் 4–5 ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் அவரை கடுமையாக முறைத்தனர்.
அவர் அமைதியாக பதிலளித்தபோதும், ‘இன்று ராணுவ அதிகாரி சிக்கியிருக்கிறார்’ என்று கேலி செய்தனர். மூத்த அதிகாரியை அழைக்க அவர் கூறியபோது மறுத்து, கேட்டை மூடிவிட்டனர்,” என குற்றம் சாட்டியுள்ளார்.
Watch closely between 20–30 secs — it’s a @flyspicejet staffer who first raises his hand on the Army officer.
The officer was outnumbered and assaulted by 2–3 SpiceJet employees first.
Let the facts speak before the judgments fly. pic.twitter.com/T9yfEVPO0Y
— दृष्टिकोण 🇮🇳 (@Drishti_K47) August 4, 2025
“>
மாறுபட்ட வகையில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் முதசீர் அக்மத் கான், “அந்த ராணுவ அதிகாரி இரண்டு காபின் பைகளை, 16 கிலோ எடையுடன் எடுத்திருந்தார். விதிமுறைக்கேற்ப ஒருவர் 7 கிலோவிற்கு மேல் எடுக்க முடியாது என்பதால், அவரை தடை செய்தோம்.
அவர் கோபத்துடன், என்னை கையால் அடித்து, மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வரும்வரை தாக்கினார். ” என தெரிவித்தார். மேலும், அந்த அதிகாரி மற்ற நான்கு ஊழியர்களையும் தாக்கியதாக அவர் புகார் தெரிவித்தார்.
Full support to the army officer
It is truly disturbing to see how biased and irresponsible certain media platforms can be publishing one sided narratives without any real investigation or attempt to understand the full story#IndianArmy #SpiceJet #MediaBias #SrinagarAirport pic.twitter.com/brFqH3xdg9
— सागर अशोकराव करपे (@SagarKarape123) August 3, 2025
“>
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் தாக்கப்பட்ட நான்கு ஊழியர்களில் ஒருவர் முதுகுத்தண்டு பிளவு மற்றும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார்கள் . சம்பவத்தில் ஈடுபட்ட பயணியை நோ–ப்ளை பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்,” எனக் கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராணுவம், “முழுமையான விசாரணையின் முடிவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
I hope all retired Army officers will agitate & demand for strong action against this Army officer just the way they do if any of their officer is beaten up by anyone
This is horrendous behaviour @adgpipic.twitter.com/KAjKXUXNf5
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) August 3, 2025
“>
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வலுத்த பாகுபாடுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் ராணுவ அதிகாரிக்கு சாதகமாக சிலர் கூறுகின்றனர், மற்றொரு பக்கம் ஊழியர்கள் மீது வன்முறையைக் காட்டியது தகாதது என மற்றோர் பிரிவு வலியுறுத்துகிறது.
சம்பவம் தொடர்பான முழு உண்மை விசாரணையில் தெரியவரும் வரை, அதிகாரிகள் இருபுற வாதங்களையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
