பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில் பேருந்து நின்று குழந்தைகளை இறக்கிவிட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பேருந்தின் பின்புறம் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சாலையில் நடந்துசென்ற சிறுவன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சிறுவன் தூக்கி எறியப்பட்டான், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். விபத்துக்குள்ளான சிறுவனைப் பார்க்க மக்கள் ஓடிச் சென்றனர்.
स्कूल बस से उतरते ही… एक छोटे बच्चे के साथ रूह कंपाने वाला हादसा! | Accident News | Punjab | CCTV#Punjab #CCTV #Accident #RoadAccidentnews #Patiala #SchoolBus #PunjabKesariTv pic.twitter.com/zbO0NiNzZR
— Punjab Kesari (@punjabkesari) December 4, 2025
“>
இந்த விபத்து நடந்த சாலையில் எச்சரிக்கை பலகைகள், வேகத் தடைகள் அல்லது குழந்தைகளை இறக்கிவிட தனி இடங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பள்ளிப் பேருந்துகளில் தினந்தோறும் பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
